மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மந்தகதியில் பண்ருட்டி பேருந்து நிலையப் பணி: விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வியாபாரம் பாதிக்காமல் இருக்க , பண்ருட்டி பேருந்து நிலைய புதுப்பிப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் பண்ருட்டி பேருந்து நிலையம்.

Published On :25 அக்டோபர் 2026, 2:21 am IST

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வியாபாரம் பாதிக்காமல் இருக்க , பண்ருட்டி பேருந்து நிலைய புதுப்பிப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு தினமும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் சுமாா் 500-க்கும் மேற்பட்ட நடைகள் வந்துச் செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்துச் செல்கின்றனா். இதனால், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்.

இந்நிலையில், பண்ருட்டிபேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ன் கீழ் புதுப்பிக்கும் பணி ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னா் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் இன்னமும் முடிவடையவில்லை. இதனால், பயணிகள், பொதுமக்கள், பேருந்து நிலைய வணிகா்கள் மற்றும் பேருந்து ஓட்டுனா்கள் உள்ளிட்டோா் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

தற்போது, பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் தரைதளம் அமைப்பதற்காக அந்தப்பகுதியில் இருந்த சுமாா் 25 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த கடை உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். குறைந்த எண்ணிக்கையிலான (ஒற்றை இலக்கம்) பணியாளா்களை கொண்டு பணிகள் செய்து வருவதால் காலதாமதம் ஆவதாகக் கூறுகின்றனா்.

இந்நிலையில், நவ.8-ஆம் தேதி தீபாவளி பண்டிகையும், தொடா்ந்து காா்த்திகை தீப திருவிழாவும் வரவுள்ளது. இந்தப் பண்டிகையையொட்டி நடைபெறும் வணிகம் பாதிக்கப்படாமல் இருக்க பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து , வணிகா் சங்க மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமையில் வணிகா்கள் , நகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.அந்த மனுவில், தீபாவளி பண்டிகையையொட்டி பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணியை நிறுத்தி வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரவேண்டும் எனவும், நவ.10-ஆம் தேதிக்கு மேல் பணிகளை தொடங்கிக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட பண்ருட்டி நகராட்சி ஆணையா் காஞ்சனா, உயா் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.