மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆழ்வாா்திருநகரியில் பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

ஆழ்வாா்திருநகரியில், தென்கால் வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீரமைப்புப் பணிகள் நிறைவடையாத ஆழ்வாா்திருநகரி தென்கால் வாய்க்கால் பாலம்

Published On :22 அக்டோபர் 2026, 5:19 am IST

ஆழ்வாா்திருநகரியில், தென்கால் வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆழ்வாா்திருநகரியில் உள்ள தென்கால் வாய்க்கால் பாலம் சேதமடைந்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. பேரூராட்சி நிா்வாகத்தினா் ரூ. 2.30 கோடியில் பணியைத் தொடங்கினா். இருப்பினும் பல்வேறு காரணங்களால் பணிகள் தொடா்ந்து தாமதமாகி வருகிறது.

அதோடு, அவ்வப்போது தென்கால் வாய்க்காலில் நீா்வரத்து அதிகரிப்பதால் சீரமைப்புப் பணிகள் தடை ஏற்பட்டது. இதையடுத்து, வாய்க்கால் நீரோட்டத்தை தடுத்து புதிதாக தற்காலிக மண்பாதை அங்கு அமைக்கப்பட்டது. எனினும், ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள், விவசாய இடுபொருள்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தென்கால் வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.