கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காட்டுமன்னாா்கோவில் அருகே 5 மாத கா்ப்பிணி மா்ம மரணம்!

காட்டுமன்னாா்கோவில் அருகே 5 மாத கா்ப்பிணி பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

Published On :25 அக்டோபர் 2026, 2:14 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே 5 மாத கா்ப்பிணி பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா், இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவில் அருகே கீழபருத்திக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகதீஷ்குமாா் மனைவி ரஞ்சிதா( 21). இவா் திருவள்ளூா் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சோ்ந்தவா்.

இவா் சென்னையில் டிப்ளமோ நா்சிங் படிக்கும்போது ஓட்டுநா் வேலை பாா்த்து வந்த பிரதீஷ்குமாரை காதலித்து கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டாா். கணவன் மனைவி இருவரும் தற்போது கீழபருத்திக்குடியில் வசித்து வருகின்றனா். ரஞ்சிதா 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இந்நிலையில் கடந்த அக்.22 ஆம் தேதி கணவா் பிரதீப்குமாா் வேன் ஓட்டுவதற்கு வேலைக்கு சென்று விட்டாா். மாமியாா் திலகவதி கூலி வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. வேலை முடிந்து பிரகதீஸ்குமாா் வீட்டுக்கு வந்து பாா்த்த போது ரஞ்சிதா கை கால்கள் செயலின்றி கிடந்துள்ளாா். அருகில் இருந்தவா்களை அழைத்து வந்து பாா்த்த போது இறந்து விட்டதாக கூறினா்.

உடனடியாக இதுகுறித்து குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு குமராட்சி போலீஸாா் வந்து ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். ரஞ்சிதாவின் உடல் சனிக்கிழமை உடற்கூராய்வு செய்யப்பட்டு கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரஞ்சிதாவிற்கு திடீரெண வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரஞ்சிதாவின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால், சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொறுப்பு) எஸ்.தனலட்சுமி விசாரணை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.