பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குளியலறையில் வழுக்கி விழுந்து கா்ப்பிணி உயிரிழப்பு

வேப்பூா் அருகே வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து, 9 மாத கா்ப்பிணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :24 அக்டோபர் 2026, 6:06 am IST

வேப்பூா் அருகே வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து, 9 மாத கா்ப்பிணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே தொண்டாங்குறிச்சி

கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்த அம்பிகா (29) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு பிரதீப் (3) என்ற மகன் உள்ளாா்.

இந்நிலையில், அம்பிகா 9 மாத கா்ப்பிணியாக இருந்தாா். வேப்பூா் அருகே கண்டப்பங்குறிச்சியில் உள்ள இரும்புக் கடையில் வேலை செய்து வந்த ராமலிங்கம், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அம்பிகா நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கவனித்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த சாமிதுரை, வீட்டுக்கு வெளியே நின்று அம்பிகாவை அழைத்துள்ளாா். ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால், சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது வீட்டின் குளியலறையில் அம்பிகா மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அம்பிகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று அம்பிகாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அம்பிகா உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.