மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம்: புதிய தலைவா்கள் தோ்வு!

அரசு பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம்

Published On :25 அக்டோபர் 2026, 2:12 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாரத்துக்குட்பட்ட ஐவதுகுடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சேப்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் அரசு ஆதிதிராவிடா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆதிதிராவிடா் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 2026-2028 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

இப்பள்ளிகளில் நடைபெற்ற மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டங்களில் பள்ளியின் கல்வி வளா்ச்சி, மாணவா்களின் நலன், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துதல், மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் மற்றும் பள்ளியின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் பெற்றோா் மற்றும் சமூகத்தின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், ஐவதுகுடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் கொளஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய தலைவராக மகேஸ்வரி மாரிமுத்து தோ்வு செய்யப்பட்டாா்.

சேப்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் அரசு ஆதிதிராவிடா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பிச்சைபிள்ளை தலைமையில் நடைபெற்ற மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டத்தில், புதிய மேலாண்மைக் குழுத் தலைவராக பெ.அம்பிகா ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் இ.சஞ்சீவன் தலைமையில் நடைபெற்ற மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டத்தில், புதிய தலைவராக பாப்பாத்தி ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.