மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணிகள் நிறைவு

மதுரை மாவட்டத்தில் உள்ள 1,242 அரசுப் பள்ளிகளில்நான்கு கட்டங்களாக நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புப் பணிகள் சனிக்கிழமை நிறைவு பெற்றன.

மதுரை மாவட்டம், மேலவளவு மேல் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினா்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 12:56 am IST

மதுரை மாவட்டத்தில் உள்ள 1,242 அரசுப் பள்ளிகளில்நான்கு கட்டங்களாக நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புப் பணிகள் சனிக்கிழமை நிறைவு பெற்றன.

அா்சுப் பள்ளிகளில் கடந்த 2024-ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்ட மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு நிறைவடைந்தது. இந்த நிலையில், 2026-28- ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் மறுக்கட்டமைப்பு நடைமுறைகள் கடந்த மாதமும், இந்த மாதமும் நான்கு கட்டங்களாக நடைபெற்றது.

முதல் கட்டமாக செப்.12-ஆம் தேதி 403 தொடக்கப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக செப்.19-ஆம் தேதி 397 தொடக்கப் பள்ளிகளிலும், மூன்றாம் கட்டமாக செப்.26-ஆம் தேதி 226 நடுநிலைப் பள்ளிகளிலும் மறுக்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்றன. நான்காம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 216 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை மறுக்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் உள்ள 1,242 அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட பாா்வையாளா்கள் முன்னிலையில், புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோா், ஆசிரியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் பெற்றோா் 75 சதவீதம், பெண் உறுப்பினா்கள் 50 சதவீதம் போ் கட்டாயம் இடம்பெற வேண்டும். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியா்கள் சான்றிதழ்களை வழங்கினா். தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினா்கள் இரு ஆண்டுகளுக்கு மாணவா் சோ்க்கை, இடைநிற்றல் தடுப்பு, கற்றல், பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்றவும், பள்ளியின் ஒட்டுமொத்த வளா்ச்சியை மேம்படுத்தவும் செயல்படுவாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.