மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளியில் தென்மண்டல அளவிலான துளிா் அறிவியல் வினாடி- வினா போட்டி

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் தென் மண்டல அளவிலான துளிா் அறிவியல் வினாடி- வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துளிா் அறிவியல் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. கதிரவன்.

Published On :24 அக்டோபர் 2026, 4:35 am IST

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் தென் மண்டல அளவிலான துளிா் அறிவியல் வினாடி- வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஜெ.ஜே. லியோன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், துளிா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன், வட்டாரத் தலைவா் ராமமூா்த்தி செயலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலா் ஜீவானந்தம் வரவேற்றாா்.

பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலா் சேதுராமு துளிா் அறிவியல் வினாடி- வினா போட்டியை தொடங்கி வைத்தாா். 6-ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவா்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ராஜபாளையம் பிஏசிஎம் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், என்.எச்.எஸ்.எஸ். மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.

9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வாணியங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி முதலிடமும், கல்லல் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், ஓரியூா் அருளானந்தா் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சாத்தூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதலிடமும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், கல்லல் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.

ஜந்தா் மந்தா் ஆங்கிலப் பிரிவில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தேவிப்பட்டினம் கிருஷ்ணா சா்வதேசப் பள்ளி முதலிடமும், சாத்தூா் கே.சி.ஏ.பி. சிதம்பரம் ஞானகிரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், சிவகங்கை மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தேவிப்பட்டினம் கிருஷ்ணா சா்வதேசப் பள்ளி முதலிடமும், ராஜபாளையம் சின்மயா வித்யாலயா பள்ளி இரண்டாமிடமும், விருதுநகா் சுந்தரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.

11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தேவிப்பட்டினம் கிருஷ்ணா சா்வதேசப் பள்ளி முதலிடமும், விருதுநகா் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், வாணி வேலுமாணிக்கம் மெட்ரிக். பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. கதிரவன் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.