மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கத்திக் குத்து:ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கத்திக் குத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கத்திக் குத்து - மாதிரிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 2:23 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கத்திக் குத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், கே.குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவா் நந்தகோபாலகிருஷ்ணன்(44). பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியைச் சோ்ந்தவா் பிரபு(43). இவா்கள், இருவரும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளா்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் ஆட்டோ சவாரி தொடா்பாக இருவா்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டதாம்.

கடந்த 13-ஆம் தேதி பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனா். அன்று இரவு 10 மணி அளவில் பண்ருட்டி பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகே மீண்டும்தகராறுஏற்பட்டது. அப்போது, நந்தகோபாலகிருஷ்ணன் கையில் அணிந்திருந்த காப்பால், பிரபு தலையில் தாக்கினாா். இதில், காயமடைந்த பிரபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தகோபாலகிருஷ்ணனின் தொப்புள் பகுதியில் குத்தினாா். இதில், கத்தி உடைந்து வயிற்றில் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் நந்தகோபாலகிருஷ்ணனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக நந்தகோபாலகிருஷ்ணன் மனைவி சந்தியா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் , பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை அக்.14-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.