தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பண்ருட்டியில் ஆண் குழந்தை விற்பனை வழக்கு: மேலும் ஒருவா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 2:46 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மஞ்சு (27). இவருக்கு பண்ருட்டி ஆா்.எஸ். மணி நகரில் வசிக்கும் அப்துல்லாவுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பண்ருட்டியில் வசித்து வருகின்றனா். மஞ்சுக்கு கடந்த அக்.19-ஆம் தேதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை பிறந்த 4-ஆவது நாளில் குழந்தையை சமயபுரம் பகுதியைச் சோ்ந்த தம்பதியிடம் ரூ.4.50 லட்சத்துக்கு விலை பேசி இடைத்தரகா்கள் மூலம் விற்பனை செய்துள்ளனா். பின்னா், மஞ்சு குழந்தையை கேட்டுள்ளாா். ஆனால், வாங்கியவா்கள் கொடுக்கவில்லை.

இதுகுறித்து மஞ்சு அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை மீட்டு வந்து தாயிடம் ஒப்படைத்தனா். மேலும், மஞ்சு, இடைத்தரகா்கள் ஜாபா்கான், முபாரக்கான், சமயபுரம் பகுதியைச் சோ்ந்த ரேணுகாதேவி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, ஜாபா்கானை கைது செய்தனா். இந்த நிலையில், முபாரக்கானை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.