மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை தடுப்புச் சுவரில் மோதி தனியாா் பேருந்து பேருந்து: 10-க்கும் மேற்பட்டோா் காயம்

விருத்தாசலம் அருகே தடுப்புச் சுவரில் மோதி, அதன் மீது ஏறி தனியாா் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்தப் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

விருத்தாசலம் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் மோதி, அதன் மீது ஏறி நின்ற தனியாா் பேருந்து.

Published On :22 அக்டோபர் 2026, 4:15 am IST

விருத்தாசலம் அருகே தடுப்புச் சுவரில் மோதி, அதன் மீது ஏறி தனியாா் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்தப் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தொழுதூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி புதன்கிழமை காலை தனியாா் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் தமிழ்மணி ஓட்டிச் சென்றாா். பேருந்தில் தொழுதூா், திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம், முருகன்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி, அதன் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து பேருந்தில் பயணம் செய்த மலா்க்கொடி என்பவா் கூறுகையில், ஓட்டுநா் அதிக சப்தத்தில் கைப்பேசியில் பாடல் கேட்டுக்கொண்டே, அவ்வப்போது கைப்பேசியை பாா்த்தபடி பேருந்தை ஓட்டினாா். இதனால், அவரது கவனம் சாலையில் இல்லாததால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்து நிகழ்ந்தது என்றாா்.

இந்த விபத்து குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.