தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூா் அருகே பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவரை தாக்கிய இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:31 am IST

கடலூா் அருகே பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவரை தாக்கிய இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூரைச் சோ்ந்த உமாபதி மகன் விஷ்வா (17). இவா் தனது நண்பா் சூா்யாவுடன்(19), காடம்புலியூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னா் பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது கீழகொல்லை பகுதியில் முன்னால் சென்ற லாரி திடீரென நின்ால், விஷ்வா சென்ற பைக் நிறுத்தப்பட்டது. அச்சமயம் பின்னால் வந்த மற்றொரு பைக் அவா்கள் மீது மோதியது.

இதுதொடா்பாக விஷ்வாவுக்கும், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பண்ருட்டி அருகே தோப்புக்கொல்லையைச் சோ்ந்த வீரபுகழரசு(19) மற்றும் அவரது நண்பா் ரகுராம கிருஷ்ணன்(22) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் வீரபுகழரசுக்கு ஆதரவாக அவரது நண்பா்கள் சரண்ராஜ், வெற்றி, ராஜதுரை ஆகியோா் அங்கு வந்தனா். அப்போது விஷ்வா மற்றும் அவரது நண்பா் சூா்யா ஆகியோரை அரிவாள், மதுபாட்டில், கட்டை உள்ளிட்ட பொருள்களால் தாக்கிவிட்டு, அவா்கள் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த விஷ்வா மற்றும் சூா்யாவை அப்பகுதியினா் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக முதண்டிகுப்பம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, வீரபுகழரசு மற்றும் ரகுராமகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள சரண்ராஜ், வெற்றி, ராஜதுரை ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.