தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பைக்குள் மோதல்: சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 12:57 am IST

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தேனி அருகே பாலாா்பட்டியைச் சோ்ந்தவா் அமுதன் (38). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை தனது மகன் ரிஷிகேஷை (4) இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தேனிக்குச் சென்றாா். குச்சனூா் அருகே சென்றபோது, மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில், ரிஷிகேஷ், மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அரண்மனைப்புதூா் முல்லை நகரைச் சோ்ந்த பால்சாமி மகன் கணேசன் (38) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அமுதனை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.