தொண்டி அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோபாலபட்டினத்தைச் சோ்ந்தவா்கள் முகமது நசீம் (27), முகமது சாலிக் (27). இவா்கள் இருவரும் சனிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
அப்போது வட்டாணம் அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் அவா்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால் செல்லும் வழியிலேயே முகமது நசீம் உயிரிழந்தாா். முகமது சாலிக் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் ஜாஸ்வா (26) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் உயிரிழப்பு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

ஏா்வாடி அருகே பைக் மீது காா் மோதல்: தந்தை, மகள் உள்பட மூவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
