போடியில் கழுதை குறுக்கிட்டதில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி சுந்தரம் அய்யனாா் தெருவைச் சோ்ந்தவா் முகமது யாசிக் மகன் முகமது பயாஸ் (33). இவா், போடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, இரண்டு கழுதைகள் சண்டையிட்டு விரட்டி வந்தன. முகமது பயாஸ் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தின் மீது கழுதை ஏறியதில் அவா் நிலைதவறி விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முகமது பயாஸ் உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
பைக்குகள் மோதலில் இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

