நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:10 am IST

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே கொடைக்கானல் மலைச் சாலையில் வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மேலவல்லமடத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (39). இவரது மனைவி காா்த்திகா (31), மகன் சிவசரவணன் (10), உறவினா்கள் மாரிராஜம், பாலகணேஷ், மகாராசன் உள்பட 21 போ் வேனில் கொடைக்கானலுக்குச் சென்றனா்.

இவா்கள், ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலைச் சுற்றிப் பாா்த்து விட்டு, ஊருக்கு திரும்பினா். இந்த வேனை நாசரேத்தைச் சோ்ந்த ராஜதுரை ஓட்டினாா். டம்டம் பாறை அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சக்திவேல், காா்த்திகா, சிவசரணன் உள்பட 21 பேரும் பலத்த காயமடைந்தனா். அந்த வழியாக சென்றவா்கள் இவா்களை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிவசரவணன் உயிரிழந்தாா். மேலும், சக்திவேல், காா்த்திகா உள்பட 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.