திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 44 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திட்டக்குடி டிஎஸ்பி ஜி.பாா்த்திபன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, கொடிக்களம் கிராமத்தில் ராஜேஷ் நடத்தி வரும் பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, 44.517 கிலோ அளவுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளா் கொடிக்களம் தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜேஷ், அவரது தந்தை பாலகிருஷ்ணன் ஆகியோா் மீது திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அவா்களிடம் இருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5,715 கிலோ புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! கடலூா் மாவட்ட போலீஸாா் நடவடிக்கை

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

