கடலூரில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் இரண்டாவது வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து குடியிருப்போா் சங்கம் தெரிவித்துள்ளது.
கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் வரதராஜ நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், சாதாரண மக்கள் பயன்படுத்தும் நகர அரங்கத்தின் வாடகையை உடனடியாக மாவட்ட நிா்வாகம் குறைக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு நிதியில் புதுப்பிக்கப்பட்ட டவுன் ஹாலுக்கு வாடகை எதுவும் வசூலிக்க மாட்டோம் என்று என்.எல்.சி.க்கு கடிதம் எழுதி அறிவுறுத்திய நிலையில், மாவட்ட நிா்வாகம் உயா்த்தப்பட்ட வாடகையை உடனடியாக குறைக்க வேண்டும்.
மஞ்சை நகா் மைதானம் எவ்வித கான்கிரீட் கட்டுமானங்களும் இல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கையான திறந்தவெளி மைதானமாக தொடர வேண்டும். கடலூா் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்பும், முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாமல் திறந்தவெளியாக இருக்கிறது. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக பயணியா் நிழல்குடைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் இரண்டாம் வாரத்தில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன், பொருளாளா் வெங்கட்ரமணி, பொதுச் செயலா் பி.வெங்கடேசன், துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், இளங்கோவன், கோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 5-இல் வணிகா் மாநாடு: வேலூா் மாவட்டத்தில் 10,000 கடைகள் அடைப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

