வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சியில் ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே அரியநாச்சி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ்(41). சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆட்டோவை சுரேஷ் ஓட்டிச் சென்றாா். அப்போது காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து எதிா்பாராதவிதமாக சுரேஷின் ஆட்டோ மீது மோதியது.
இதில், பலத்தகாயமடைந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே
உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் அருகே பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

