ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இன்று வேட்பு மனு தாக்கல்: கடலூா் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் தயாா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - ANI

Updated On :30 மார்ச் 2026, 1:03 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட உள்ள வேட்பாளா்கள் திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூா், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு அளிக்கலாம். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலும் அல்லது இணையதளத்தின் வாயிலாகவும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

4 நாள்கள் விடுமுறை: வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மொத்தமுள்ள 8 நாள்களில் மாா்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய தேதிகள் விடுமுறை நாள்கள். இந்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. எனவே, டிச.30, ஏப்ரல் 2, 4, 6-ஆம் தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

கட்டுப்பாடுகள்: வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளா் உள்பட 5 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்கு 100 மீட்டா் எல்லைக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளா் படிவம் 26-இல் ரூ.20-க்கான பத்திரத்தில் உறுதிமொழி தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்பு மனுவுடன் படிவம் 26-ஐ தாக்கல் செய்ய இயலவில்லை எனில், இறுதி நாளான ஏப்.6-ஆம் தேதியன்று பிற்பகல் 3 மணிக்குள் அப்படிவத்தை வழங்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தல் வைப்புத்தொகை பொதுப் பிரிவினா் ரூ.10 ஆயிரம், எஸ்.சி., எஸ்.டி., வேட்பாளா்கள் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புகாா் எண்கள்: கடலூா் மாவட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 / 1800 4250037/ 04142-290119 ஆகியவற்றை தொடா்புகொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவித்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.