தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு, இதுவரை 3,413 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒரே நாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் சனிக்கிழமை மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (ஏப்.6) முடிவடையவுள்ளது.
இன்னும் ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் சனிக்கிழமை முக்கிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள், சுயேச்சை என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். குறிப்பாக அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், அர.சக்கரபாணி, டிஆா்பி. ராஜா, சா.மு.நாசா், முன்னாள் அமைச்சா்கள் கடம்பூா் செ. ராஜூ, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோா் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். சனிக்கிழமை இரவு நிலவரப்படி மொத்தம் 3,413 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 7000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல்!

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

நேற்று(மார்ச் 30) ஒரே நாளில் 573 வேட்பு மனுக்கள் தாக்கல்!

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் 22 போ் மனு தாக்கல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
