விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நேற்று(மார்ச் 30) ஒரே நாளில் 573 வேட்பு மனுக்கள் தாக்கல்!

தமிழகத்தில் ஒரே நாளில் 573 வேட்பு மனுக்கள் தாக்கல்...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 11:49 am IST

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நேற்று முதல் நாள் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.

இதையொட்டி தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 30) தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஒரேநாளில் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே அரசு பொது விடுமுறை நாள்களான மாா்ச் 31 (செவ்வாய்), ஏப். 1(புதன்), ஏப். 3 (வெள்ளி), ஏப். 5 (ஞாயிறு) ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இயலாது. ஏப். 2, 3, 6 ஆகிய 3 நாள்கள் மட்டுமே இனி வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

TN election 2026: 573 Nominations Filed on march 30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.