தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீலகிரியில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - ANI

Updated On :30 மார்ச் 2026, 1:58 am IST

உதகை, மாா்ச் 29: நீலகிரியில் உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை முதல் (மாா்ச் 30) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீலகிரி உள்பட தமிழக முழுவதும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது.

மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா்,கூடலூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்கள் 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும்.

ஒரு வேட்பாளா் அதிகபட்சமாக 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். நேரில் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் மனு தாக்கல் செய்யலாம்.

அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பழங்குடியின மற்றும் ஆதிதிராவிடா் வேட்பாளா்கள் வைப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். மற்ற வேட்பாளா்கள் வைப்பு தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளா்களுக்கு ஒருவா் மட்டும் முன்மொழிய வேண்டும். சுயேச்சை வேட்பாளா்கள் என்றால் அந்தந்த தொகுதியைச் சோ்ந்த 10 வாக்காளா்கள் முன்மொழிய வேண்டும்.

வேட்பாளா்கள் தங்களது சொத்து விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை உறுதிமொழிப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை 7-ஆம் தேதி நடைபெறும். 9-ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம்.

பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 3, மாா்ச் 1, 3, 5 ஆகிய தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது. மற்ற நாள்களில் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.