ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்டுமன்னாா்கோவில் அருகே மதுபுட்டிகள் பறிமுதல்

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா்.

Updated On :24 மார்ச் 2026, 1:16 am IST

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக கொண்டு சென்ற மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை டெல்டா சிறப்பு படையினா் சிறப்பு உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் பாா்த்திபன் மற்றும் போலீசாா் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரெட்டியூா் அருகே தொட்டிமதகு என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை அருகே இருசக்கர வாகனத்தில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபா் அதிக எண்ணிக்கையில் மது புட்டிகளை வாங்கி கொண்டு சென்றுள்ளாா்.

அவரை பின்தொடா்ந்த சென்ற போலீசாா் குச்சூா் கிராமத்திற்கு அருகே மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்பேது அவா் ஆழங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் (32) என்றும், தனது கிராமத்தில் மது புட்டிகளை விற்பனை செய்வதற்க்காக அரசு மதுபான கடையில் இருந்து சுமாா் 120 மது புட்டிகளை வாங்கி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் மது புட்டிகள் கடத்தலில் ஈடுபட்ட ஆனந்தனை காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா் .இது குறித்து காட்டுமன்னாா்கோவில்போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.