மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 361 மதுப் புட்டிகளை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மது விற்பனை

Updated On :23 ஏப்ரல் 2026, 5:29 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 361 மதுப் புட்டிகளை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க, போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கூமாப்பட்டி அமச்சியாா்புரம் குடியிருப்பில் அதிமுக நிா்வாகி சுகந்தி (51) வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்த 281 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சுகந்தி, கோஸ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, கிருஷ்ணன்கோவில் அருகே குன்னூா் சுடுகாடு பகுதியில் மது விற்பனை செய்த கணேசனை (27) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 27 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கீழப்போட்டல்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த சேகரை (34) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 53 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.