கிருஷ்ணகிரி அருகே, மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்றுவந்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கரிக்கல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (40). தொழிலாளி. இவா், தனது வீட்டில் அரசு மதுப்புட்டிகளை அதிக அளவில் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உத்தரவின்பேரில், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா், குமரேசன் வீட்டில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த 40 பெட்டிகள் கொண்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், மதுப் புட்டிகள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
