கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கல்லூரி சென்று திரும்பிய மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வடலூா் காவல் சரகம், தென்குத்து கிராமத்தைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவியை புவனகிரி வட்டம், கரைமேடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சில ஆண்டுகளுக்கு முன்னா் வடலூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தபோது காதலித்து வந்தாராம். பின்னா், இருவரது வீட்டில் தெரிந்ததும் கண்டித்து விட்டனராம்.
இந்நிலையில், புதன்கிழமை அந்த மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்தாராம். அப்போது, சிறுவன், பின்தொடா்ந்து சென்று தகாத முறையில் நடந்துக் கொண்டாராம். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனா். பின்னா், இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் ஆஜா் செய்ய அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இருவா் கைது
சாம்பவா்வடகரை பகுதியில் தொடா் திருட்டு: 5 போ் கைது
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
