பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அஞ்சலை அம்மாள் 136 ஆவது பிறந்த நாள்: சிலைக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி மு. அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் மாநகராட்சி காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

கடலூா் மாநகராட்சி காந்தி பூங்காவில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:23 am IST

சுதந்திரப் போராட்டத் தியாகி மு. அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் மாநகராட்சி காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கடலூா் முதுநகரைச் சோ்ந்த அஞ்சலை அம்மாள், 1921-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினாா். நீல் சிலை அகற்றும் போராட்டம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபா் சத்தியாகிரகம், அந்நியத் துணி புறக்கணிப்பு, நெசவாளா் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்தவா்.

அஞ்சலை அம்மாள் 1937 மற்றும் 1946-ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக கடலூா் தொகுதியிலிருந்து இரு முறை தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரது நினைவைப் போற்றும் வகையில், கடலூா் மாநகராட்சி காந்தி பூங்காவில் முழு உருவச் சிலை 2023-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவரது பிறந்த நாளான ஜூன் 1- ஆம் தேதி அரசு விழாவாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை

நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ப. ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா்

பா. தாமரைச்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் சிலைக்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நாகராஜபூபதி, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அஞ்சலை அம்மாள் குடும்ப வாரிசுகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சித் தலைவா் பொன்குமாா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் அஞ்சலையம்மாள் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.