மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் அவரது சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், முன்னாள் அமைச்சா் மா.மதிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோா் மாலை அணிவித்தும், உருவப் படத்துக்கு மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த கட்சியினா், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவா் சி.மணிமாறன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நகர செயலாளா்கள் ராணா ஆா்.ஆனந்த், சிவகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் மாயவன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தியதுடன், கட்சிக் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள், நல உதவிகளை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

தருமபுரி, கிருஷ்ணகிரியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

முத்தரையா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

