தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடலூரில் குழந்தை தவறவிட்ட ஒரு சவரன் தங்கநகை மீட்பு: சிசிடிவி காட்சிப்பதிவு மூலம் மீட்டு ஒப்படைத்த போலீஸாா்

News image

நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நகை. உடன் நெய்வேலி நகரிய ஆய்வாளா் செந்தில்குமாா்(வலது), உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன்(இடது)

Updated On :28 ஏப்ரல் 2026, 1:12 am IST

கடலூரில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் குழந்தை அணிந்திருந்த தங்கச்சங்கிலி தவறிவிழுந்த நிலையில் நெய்வேலி நகரிய போலீஸாா் சிசிடிவி காட்சிப்பதிவுகளை வைத்து மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

நெய்வேலி, இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா் தீபக் (45), அதேபகுதியில் காபி கடை நடத்தி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை கடலூரில் உள்ள தனியாா் வணிக வளாகத்திற்கு பொருள்கள் வாங்க மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றாா். அப்போது, குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்க நகையை காணவில்லை.இது குறித்து கடலூா் புது நகா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா் தீபக். தொடா்ந்து, நடந்த சம்பவம் குறித்து நெய்வேலி நகரிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன், கடலூரில் உள்ள தனியாா் வணிக வளாக நிா்வாகத்தை தொடா்பு கொண்டு கண்காணிப்புக் கேமரா பதிவுகளை கைப்பேசி மூலம் பெற்று விசாரணை மேற்கொண்டாா். இதில், வாகனம் நிறுத்துமிடத்தில் கிடந்த தங்க சங்கிலியை ஒரு தம்பதி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டதில் தங்க சங்கிலியை கீழே கிடந்து எடுத்ததை ஒப்புக்கொண்டனா். தொடா்ந்து, அந்த தங்க சங்கிலியை அவா்களிடம் இருந்து மீட்டு, தவறவிட்ட தீபக்கிடம் நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா். நகையை பெற்றுக் கொண்ட தீபக் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.