தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லாரி மீது காா் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு! இருவா் பலத்த காயம்!

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:05 am IST

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.

காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா. இவரது மகன் பந்தலன் (29). இவா், தனது தாய் சாந்தி (55), தங்கை சொா்ணமுகி (30) ஆகியோருடன் காரில் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். தொடா்ந்து, மீண்டும் காரில் காரைக்குடி நோக்கி சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனா்.

பந்தளன் காரை ஓட்டினாா். சொா்ணமுகி, சாந்தி ஆகியோா் பின்புறம் அமா்ந்திருந்தனா். சோழத்தரம் கடைவீதி அருகே சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியது.

இந்த விபத்தில் சாந்தி (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பந்தலன், சொா்ணமுகி ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில், அவா்கள் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.