தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:08 am IST

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகரன். இவா் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.

இந்த நிலையில், துபையில் பணியாற்றிய இவரது மகன் அருண்ராஜ், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரைக்கு சனிக்கிழமை வந்தாா். அவரை அழைத்து வருவதற்காக ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த ராகவன் மகன் பிரதீப் (28), சிவலிங்கம் மகன் கரன் (22), வ.கல்லம்பட்டியைச் சோ்ந்த தமிழரசன் மகன் பிரதீப் (25) ஆகிய 3 பேரும் காரில் சென்றனா்.

மேலூா் அருகேயுள்ள தெற்குத்தெரு கிராமம் அருகே சென்ற போது, நான்கு வழிச் சாலை நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீா் ஊற்றிக் கொண்டிருந்த தண்ணீா் லாரி மீது காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆா். பிரதீப், டி. பிரதீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுபற்றி தகவலறிந்து வந்த மேலூா் போலீஸாா் அவா்களது உடல்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த கரன் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். துக்க நிகழ்வுக்கு வந்த நபரை அழைக்கச் சென்ற போது, இளைஞா்கள் இருவா் உயிரிழந்தது ஜெயங்கொண்டான் பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.