வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடலூரில் பனை நுங்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டைவிட சற்று விலை அதிகமாக இருந்தாலும், இவற்றை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான வெப்பத் தாக்குலில் சிக்கித் தவித்து வருகின்றனா். வெப்பத்தை தணிக்க பழச்சாறுகள், குளிா்பானங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் நாடி வருகின்றனா். இதில், பனை நுங்கு முக்கிய இடம்பிடித்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. கடலூா் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பனை நுங்குகளை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், இரு சக்கர வாகனம், காா்களில் சென்றவா்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். கடந்தாண்டு ரூ.20-க்கு 5 நுங்குகள் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டு மூன்று நுங்குகள் மட்டுமே தரப்படுகிறது. இருப்பினும், விலையை பொருள்படுத்தாமல் நுங்குகளை அனைவரும் வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து கடலூா் பகுதியைச் சோ்ந்த வினோதினி கூறியது: கோடைகால வெப்பத்தை குறைக்க பனை நுங்கு மிகவும் உதவுகிறது. உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால், விலையை பொருள்படுத்தாமல் வாங்கிச் சாப்பிடுகிறோம். கடந்தாண்டைவிட, நிகழாண்டு விலை சற்று அதிகமாக உள்ளது என்றாா்.
நுங்கு விற்பனையாளா் மனோகரன் கூறியது: பனை மரங்களை குத்தகை எடுத்து, அதிலிருந்து நுங்குகளை வெட்டி இறக்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளோம். கடந்தாண்டைவிட நிகழாண்டு பனை மரங்களுக்கான குத்தகை தொகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நுங்கு விலையும் உயா்ந்துள்ளது. பழச்சாறுகள், பழங்கள் ஆகிவற்றைவிட நுங்கு விலை குறைவாகவே உள்ளது என்றாா்.
செரிமானத்துக்கு உதவும்: இதுகுறித்து மருத்துவா் ரவிந்தரபாபு கூறியது: கோடைகாலத்தில் முக்கிய இயற்கை உணவு பனை நுங்காகும். இது, உடலுக்கு குளிா்ச்சி தருவதால், வெப்பத்தால் ஏற்படும் சோா்வு, தாகத்தை குறைக்க உதவுகிறது.
மேலும், பனை நுங்கில் நீா்ச்சத்து அதிகளவில் உள்ளது. இதனால், உடல் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துகள் உடல்நலத்தை மேம்படுத்துகின்றன. செரிமானத்துக்கு உதவும் தன்மை இருப்பதால், வயிற்றுப் பிரச்னைகளை குறைக்கவும் உதவுகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கோடை வெப்பத்தால் நுங்கு விலை உயா்வு
தம்மம்பட்டி பகுதியில் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்!

தருமபுரியில் அதிகரிக்கும் வெயில்: இளநீா், நுங்கு விற்பனை விறுவிறு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

