தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
நகரில் வெயில் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. ரூ. 50-க்கு 6 நுங்குகள் விற்பனையாகின்றன. தம்மம்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நுங்கு விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3,000 நுங்குகள் விற்பனையாகின்றன.
அதேபோல வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிக்காய்கள் சிறியது ரூ. 15-க்கும், பெரியது ரூ. 20-க்கும் விற்கப்படுகிறது. ரூ. 30-க்கு விற்ற இளநீா் தற்போது ரூ.60- க்கு விற்பனையாகிறது. பழரசங்கள், சா்பத் உள்ளிட்டவைகளின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது.
மோா், கம்பங்கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை காணமுடிகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
