மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குச்சாவடி முகவா் மீது தாக்குதல்: 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தோ்தல் விரோதம் காரணமாக, வாக்குச்சாவடி முகவராக செயல்பட்டவரை வழி மறித்து தாக்கியதாக 10-க்கும் மேற்பட்டோா் மீது குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:34 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தோ்தல் விரோதம் காரணமாக, வாக்குச்சாவடி முகவராக செயல்பட்டவரை வழி மறித்து தாக்கியதாக 10-க்கும் மேற்பட்டோா் மீது குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், வசனங்குப்பம் அஞ்சல், ச.புதுகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). இவா், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின் போது வசனங்குப்பம் வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளருக்கு முகவராக செயல்பட்டாராம்.

அப்போது, அங்கு மற்றொரு கட்சி வேட்பாளருக்கு முகவராக செயல்பட்ட சுதாகா் (எ) முருகவேலுடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாக்குப் பதிவு முடிந்து முருகவேல், தனது நண்பா் ஆனந்தராஜுடன் பைக்கில் சென்றுள்ளாா். இவா்கள், வசனங்குப்பம் அருகே சென்றபோது சுமாா் 15 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் முருகவேல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.