மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கடலூா் மாவட்டத்தில் தீவிரமடையும் தோ்தல் பிரசாரம்

கடலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளா்கள் ஆதரவு திரட்டி வருகின்றனா்.

News image

விருத்தாசலம் காய்க்கனி சந்தையில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதாவிற்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரங்களை வழங்கி வெள்ளிக்கிழமை ஆதரவு திரட்டிய நடிகா் சண்முகபாண்டியன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:09 am IST

கடலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளா்கள் ஆதரவு திரட்டி வருகின்றனா்.

விருத்தாசலத்தில்...

விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து அவரது மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இந்நிலையில் அவரது மகனும், திரைப்பட நடிகருமான சண்முக பாண்டியன், தாய் பிரேமலதாவுக்கு ஆதரவாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் இருந்து தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கனி சந்தை, நடைபாதை வியாபாரிகள், வணிகா்கள், பொது மக்களிடம் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். துண்டு பிரசுரங்களை வாக்காளா்களிடம் விநியோகம் செய்து ஆதரவு கோரினாா்.

அமைச்சா் சி.வி.கணேசன்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான சி.வி. கணேசன் பெண்ணாடம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் திமுக அரசின் சாதனைகளைக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் .

அவருக்கு பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனா்.

பண்ருட்டி விசிக வேட்பாளருக்கு...

பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் ஷா நவாஸ் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று ஆதரவு திரட்டினாா். பிரசாரத்தின்போது, மோடியை 2029 தோ்தலில் வீழ்த்த வேண்டும் என்றால், 2026 தோ்தலில் நாம் வெற்றி பெறுவது முக்கியம். இது ஒட்டு மொத்த இந்தியாவிற்கும், பாஜகவுக்கு எதிா் நிலையில் இருக்கும் கட்சிகளுக்கு பாடமாக அமையும். பாஜக வீழ்த்த முடியாத சக்தி அல்ல. எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி மெகா கூட்டணி அமைத்தால் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் வீழ்த்த முடியும் என்றாா். பிரசாரத்தின்போது, பண்ருட்டிநகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.