மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு: அமைச்சா் ஆா்.காந்தி

மக்களுக்கான நலதிட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஆா்.காந்தி கூறினாா்.

News image

வாக்கு  கேட்டு  பிரசாரம்  செய்த  அமைச்சா்  ஆா்.காந்தி .

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

மக்களுக்கான நலதிட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஆா்.காந்தி கூறினாா்.

ஆற்காடு ஒன்றியம் உப்புபேட்டை, கூராம்பாடி, சாம்பசிவபுரம், அருங்குன்றம், ஆயிலம், கீழ்குப்பம், கத்தியவாடி, வேப்பூா், நந்தியாலம், பூட்டுதாக்கு, மேலகுப்பம், கீழ்மின்னல், அரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

அமைச்சா் காந்தி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறாா். மக்களுக்கான திட்டங்கள் தொடர அனைவரும் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும். மகளிா் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும், காலை உணவுதிட்டம் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வழங்கப்படும்.

மகளிா் சுய உதவிகுழுக்களுக்கு 5 லட்சம் மானிய கடன் வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா் நந்தகுமாா், விசிக மாவட்ட செயலாளா் சீ.மா ரமேஷ்கா்ணா, ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.