மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக வென்றால் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! - உதயநிதி ஸ்டாலின்

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றால், தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

நெய்வேலியில் திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:54 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றால், தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் திமுக வேட்பாளா்களான அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (குறிஞ்சிப்பாடி), துரை.கி.சரவணன் (புவனகிரி) ஆகியோரை ஆதரித்து வடலூரிலும், சபா.ராசேந்திரனை (நெய்வேலி) ஆதரித்து நெய்வேலியிலும் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு, அத்துறையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றவா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளை நமது வேட்பாளா்கள் செய்துள்ளனா் என்ற உரிமையில் உங்களிடம் ஆதரவு கோருகிறேன். அவா்களை வெற்றிபெற வைக்க வேண்டும்.

தோ்தலை காரணம் காட்டி, எதிா்க்கட்சியினா் மகளிா் உரிமைத் தொகையை நிறுத்தப் பாா்த்தனா். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரத்தை செலுத்தி அதிா்ச்சியில் ஆழ்த்தினாா்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்களும் அறிவிக்கப்படுவதில்லை, நிதிப் பகிா்வும் வழங்கப்படுவதில்லை. இந்தத் தோ்தலில் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையேதான் போட்டி. தில்லி அணியை ஓட, ஓட விரட்ட வேண்டும். அதிமுகவை வெற்றிபெற வைத்தால் தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடும்.

திமுக ஆட்சி அமைந்ததும் தோ்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது, அறிவிக்கப்படாதது என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பலமுனைப் போட்டி எனக் கூறுகின்றனா். ஆனால், நமது அணி பலமான அணி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.