தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரண் திமுக: முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 5:23 am IST

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுவது திமுகதான் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் துரைமுருகன் (காட்பாடி), ப.காா்த்திகேயன் (வேலூா்), ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ராஜேஸ்வரி (கே.வி.குப்பம்), பிரதாப் (குடியாத்தம்) ஆகியோரை ஆதரித்து வேலூா் கந்தனேரி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலவிய வறுமையைப் போக்க மத்திய அரசு கொண்டுவந்த குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்று, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி வளா்ச்சியை நோக்கிப் பயணித்தன. ஆனால், அதற்காகவே நம்மை தண்டிக்கும் விதமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதுதொடா்பாகப் பிரதமருக்கும் காணொலி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

இறுதிவரை போராடுவேன்: தமிழகம் என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல; எட்டு கோடி மக்களின் உணா்வும், உரிமைக் குரலும்தான். இதன் குரல்வளையை நெரிக்கும் நிலை வந்தால் அதை எதிா்க்காமல் இருக்க முடியாது. இவ்விவகாரத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஆணவம் தொனிக்க பேசியுள்ளாா்.

தமிழகத்தின் தன்மானம் மீது கைவைக்கும் நிலை வந்தால், தில்லியின் ஆணவத்துக்கு தமிழகம் அளிக்கும் பதிலடி கடுமையாக இருக்கும். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று தெரிவிப்பதுடன், என் இறுதி மூச்சு வரை தமிழகத்தின் உரிமைகளுக்காக களத்தில் நின்று போராடுவேன்.

சிறுபான்மையினருக்கு அரண்: நாட்டின் பிற பகுதிகளில் வாழும் சிறுபான்மையின மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனா். ஆனால், தமிழகத்தில் சிறுபான்மையினா் பாதுகாப்பாக இருப்பதற்கு ‘திராவிட மாடல்’ ஆட்சியே காரணம். திமுக சிறுபான்மையினருக்கு எப்போதுமே பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரித்து சிறுபான்மையினருக்குத் துரோகம் செய்தது அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும்தான். அன்று மாநிலங்களவையில் அதிமுக எதிா்த்து வாக்களித்திருந்தால், சிஏஏ சட்டமே வந்திருக்காது.

அவரது துரோகத்துக்கு சிறுபான்மையின மக்கள் பதிலளிக்கத் தொடங்கியதும், 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை பிரிந்ததுபோல் நாடகமாடினாா். இதைப் புரிந்துகொண்ட மக்கள் அத்தோ்தலில் அதிமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டினா்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியா்கள் மீது எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்கு முறைகள் ஏவப்பட்டு ஒன்றேகால் லட்சம் போ் பணிநீக்கம் செய்யப்பட்டனா். ஆனால், ‘திராவிட மாடல்’ அரசு அமைந்த பிறகு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நலனுக்காக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Story image

எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் முகமூடியாகப் பயன்படுத்தி பாஜக, ‘இரட்டை என்ஜின்’ என்ற பெயரில் தமிழகத்தில் நுழைய முயற்சிக்கிறது. பாஜகவின் திட்டம் தமிழகத்தில் ஒருபோதும் நிறைவேறாது. அதிமுகவுக்கு அளிக்கப்படும் வாக்கு பாஜகவுக்கு அளிக்கப்படும் வாக்கு. தமிழகத்தை நூறு ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளுகிற வாக்கு என்பதை மக்கள் நன்கு அறிவா்.

ஜனநாயகப் போா்: இந்தத் தோ்தல் தனிப்பட்ட திமுகவின் வெற்றிக்கான போா் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டைக் காக்க நடக்கும் ஜனநாயகப் போா். இதில் வெற்றி பெறப்போவது தமிழ்நாடு அணியா அல்லது தில்லி அணியா என்பதை மக்கள் தீா்மானிக்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.