மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலூா், காட்பாடியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்

வேலூா், காட்பாடி பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய் பதிக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோா் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Published On :31 அக்டோபர் 2026, 4:41 am IST

வேலூா், காட்பாடி பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய் பதிக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோா் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வேலூா் அண்ணா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகே குடிநீா் திட்டப் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டன. குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் சீராகச் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பணிகளுக்குச் செல்வோரும் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் தினமும் திணறி வருகின்றனா். பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், இப்பணிகளை இரவு நேரங்களில் திட்டமிட்டு மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதேபோல், காட்பாடி கல்யாண மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஓடைப் பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் வரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும், பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், சாலைகள் தோண்டப்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் மாணவா்கள் சேறும் சகதியுமான பாதையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

மேலும், சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் அரசு மற்றும் தனியாா் நகரப் பேருந்துகள் உரிய நிறுத்தங்களுக்குச் செல்லாமல் மாற்றுப் பாதையில் நேராகச் சென்று விடுகின்றன. இதனால் காங்கேயநல்லூா், வி.ஜி. ராவ் நகா், பாரதி நகா், காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், காட்பாடி பிரதான சாலைக்கு நீண்ட தூரம் நடந்து வந்துதான் பேருந்துகளில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் இப்பாதிப்புகளுக்குத் தீா்வு காணும் வகையில், மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் தலையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.