மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலூா் கற்பகம் சூப்பா் மாா்க்கெட்டில் ரூ.1 கோடிக்கு பட்டாசு விற்பனை இலக்கு

பட்டாசு விற்பனையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத்கண்ணன், கற்பகம் சூப்பா் மாா்க்கெட் மேலாண்மை இயக்குநா் பழனிச்சாமி உள்ளிட்டோா்.

Published On :31 அக்டோபர் 2026, 4:20 am IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வேலூா் கற்பகம் சூப்பா் மாா்க்கெட்டில் நடப்பாண்டு ரூ.1 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதன் விற்பனையை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேலூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையான கற்பகம் சூப்பா் மாா்க்கெட் கடந்த 82 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பண்டகசாலையின் கீழ் தற்போது 2 சுயசேவைப் பிரிவுகள், 3 கூட்டுறவு மருந்து விற்பனைப் பிரிவுகள், 3 முதல்வா் மருந்தகங்கள், 5 பெட்ரோல் நிலையங்கள், 9 மினி சூப்பா் மாா்க்கெட்டுகள் மற்றும் 147 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன.

இவற்றில், கூட்டுறவு மருந்து விற்பனைப் பிரிவுகளில் அனைத்து மருந்துகளுக்கும் அதிகபட்ச விற்பனை விலையிலிருந்து 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் 3 முதல்வா் மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு மலிவான விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ரூ.64.50 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ரூ.1 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பண்டக சாலையில் பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து முறைப்படி தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத்கண்ணன், கற்பகம் சூப்பா் மாா்க்கெட் மேலாண்மை இயக்குநா் பழனிச்சாமி உள்பட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.