மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தென்காசி மாவட்டத்தில் ரூ. 30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்

தென்காசியை அடுத்த மேலகரத்தில் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவை பிரிவில் சன்னரக அரிசி விற்பனையை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

சன்னரக அரிசி விற்பனையைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Published On :22 அக்டோபர் 2026, 5:14 am IST

தென்காசியை அடுத்த மேலகரத்தில் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவை பிரிவில் சன்னரக அரிசி விற்பனையை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இம்மாவட்டத்தில் கிலோ ரூ. 30 விலையில் விற்பனை செய்வதற்கு 16 டன் சன்னரக அரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலகரம் பாரதி நகரில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவை பிரிவு (தொடா்பு எண் 70944 02572), சங்கரன்கோவிலில் ராஜபாளையம் பிரதான சாலையில் செயல்படும் சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டகசாலையின் சுயசேவை பிரிவு (93624 10333), கடையநல்லூரில் மேலகடையநல்லூா் தலைமை தபால் நிலையம் முகவரியில் செயல்படும் கடையநல்லூா் கூட்டுறவு பண்டகசாலையின் சுயசேவை பிரிவு (70944 02758), சிவகிரியில் ராஜாஜி சாலையில் செயல்படும் சிவகிரி கூட்டுறவு பண்டகசாலையின் சுயசேவை பிரிவு (94428 73371) ஆகிய 4 இடங்களில் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவை பிரிவு மூலமாக ஒரு கிலோ புழுங்கல் பொன்னி அரிசி ரூ. 60, துவரம் பருப்பு ரூ. 130, உளுந்தம் பருப்பு ரூ. 140, பூண்டு, மல்லி (தனியா) ஆகியவை தலா ரூ. 240, மிளகாய் வத்தல் ரூ. 330 என 6 பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தென்காசி மண்டல இணைப் பதிவாளா் கு. நரசிம்மன், முதுநிலை மண்டல மேலாளா் இரா. வெங்கட்லட்சுமி, துணைப் பதிவாளா்கள் த. பிரிட்டோ, ப. கோபிநாத், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை செயலாட்சியா் இரா. ராஜ், கூட்டுறவு சாா்பதிவாளா் நா. ரமேஷ்பாபு, தென்காசி கூட்டுறவு ஒன்றிய மேலாளா் கோமதிசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.