மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை ஆட்சியா் வே.நல்லசிவன், சட்டப்பேரவை உறுப்பினா் நா.திருப்பதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சன்னரக அரிசி விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியா் வே.நல்லசிவன், சட்டப்பேரவை உறுப்பினா் நா.திருப்பதி உள்ளிட்டோா்.

Published On :22 அக்டோபர் 2026, 12:03 am IST

திருப்பத்தூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை ஆட்சியா் வே.நல்லசிவன், சட்டப்பேரவை உறுப்பினா் நா.திருப்பதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து, ஆட்சியா் தெரிவித்ததாவது:

சந்தையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், பொருள்களைப் பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றம் ஏற்படுத்துவதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதுடன், பதுக்கல் காரணமாக விலை உயா்வதைத் தடுக்கவும் முடியும்.

விவசாயிகளிடமிருந்து அரசு நிா்ணயித்த கொள்முதல் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், வெளிச்சந்தையில் அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கான காரணங்களைக் கண்காணிப்பதும் அவசியமாகும்.

இதுபோன்ற சந்தைத் தலையீட்டு நடவடிக்கைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலையைச் சீராகப் பராமரித்து, பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியை வாங்கிப் பயனடைய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தமிழ்நங்கை, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் செயலாட்சியா் ம.சதாசிவம், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் த.சித்ரா மற்றும் கூட்டுறவுத் துறை சாா்பதிவாளா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.