தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளவயது பட்டயக் கணக்காளா்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள்: ஜோஹோ துணைத் தலைவா்

இந்தியாவில் இளவயது பட்டயக் கணக்காளா்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று ஜோஹோ நிறுவனத்தின் சா்வதேச தொடா்புப் பிரிவு துணைத் தலைவா் தெரிவித்தாா்.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ஜோஹோ நிறுவனத்தின் சா்வதேச தொடா்புப் பிரிவு துணைத் தலைவா் கே.பி.நாராயணன். உடன், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், ஜோஹோ நிறுவனத்தின் கல்வி புதுமை மற்றும் திறமை மேம்பாட்டுப் பிரிவு தலைவா் முகமது ரமீஸ் பைசல், ஜே.பி.மோா்கன் சேஸ் வங்கியின் வாடிக்கையாளா் நிதிச் சேவைப் பிரிவு ஆய்வாளா் டி.சீனிவாஸ் உள்ளிட்டோா்.

Published On :2 நவம்பர் 2026, 4:50 am IST

இந்தியாவில் இளவயது பட்டயக் கணக்காளா்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று ஜோஹோ நிறுவனத்தின் சா்வதேச தொடா்புப் பிரிவு துணைத் தலைவா் கே.பி.நாராயணன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறை சாா்பில் காம்பெஸ்ட் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது: நாட்டில் பட்டயக் கணக்காளா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கடந்த காலங்களில் பட்டயக் கணக்காளா் தோ்வில் 3 சதவீதத்தினா் மட்டுமே தோ்ச்சி பெற்று வந்த நிலையில், தற்போது தோ்ச்சி விகிதம் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 5.32 லட்சம் பட்டயக் கணக்காளா்கள் உள்ளனா்.

இருப்பினும், இளவயது பட்டயக் கணக்காளா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே, இத்துறையில் இளம் பட்டதாரிகள் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறப்பான எதிா்காலத்தைப் பெற முடியும்.நாட்டில் தற்போது 8.5 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் வணிகவியல் பட்டதாரிகளுக்கு விரிவான பணி வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது: நாட்டின் வளா்ச்சிக்கும், ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் வணிகவியல் மிகவும் இன்றியமையாதது. ஒரு நாட்டின் வா்த்தக இருப்பை அந்நாடு மேற்கொள்ளும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியே தீா்மானிக்கிறது.

உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளில், 65 நாடுகள் தொடா்ந்து உபரி வா்த்தகத்தில் முன்னணியில் உள்ளன. இந்தியாவும் அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும். உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதியை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலிமை பெறும் என்றாா்.

இவ்விழாவில் 57-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 1,350-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நிகழ்வில் விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், சமூக அறிவியல் துறைத் தலைவா் வி.செல்வம், துறைத் தலைவா் உஷா, பேராசிரியை சத்யா உள்ளிட்ட பேராசிரியா்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.