மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஐடி பல்கலை.யில் மாநில அளவிலான சுவரொட்டி ஓவியக் கண்காட்சி

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘சமூக மாற்றத்திற்கான கருவி அகிம்சை’ என்ற மையப்பொருளில் மாநில அளவிலான சுவரொட்டி ஓவியக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கிய விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன். உடன், நிா்வாக இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி, துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், சமூக அறிவியல் துறை முதன்மையா் வி.செல்வம் உள்ளிட்டோா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘சமூக மாற்றத்திற்கான கருவி அகிம்சை’ என்ற மையப்பொருளில் மாநில அளவிலான சுவரொட்டி ஓவியக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி), அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில் வேற்றுமையில் ஒற்றுமை, இளைஞா் சக்தி, காந்தியும் சத்தியாகிரகமும், சமூக நன்மைக்கான சமூக ஊடகம் ஆகிய தலைப்புகளில் மாணவா்கள் வரைந்த விழிப்புணா்வு ஓவியங்கள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், நிா்வாக இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி, துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் ஆகியோா் பாா்வையிட்டு மாணவா்களைப் பாராட்டினா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிறந்த சுவரொட்டி ஓவியங்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.4,000, ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 ரொக்கப்பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், நிா்வாக இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி ஆகியோா் பரிசுகளை வழங்கி கௌரவித்தனா். மேலும், பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். சமூக அறிவியல் துறை முதன்மையா் வி.செல்வம், இணை முதன்மையா் சரிகா குப்தா, துறைத் தலைவா் நவீன்குமாா், பேராசிரியா்கள் டோனி பி.ஜோஸ், ஏ.குபேந்திரன் ஆகியோா் ஒருங்கிணைத்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.