மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரு லாரிகளில் கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

வேலூா் அருகே இரண்டு லாரிகளில் கடத்திச் செல்லப்பட்ட சுமாா் 71 டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் ரேஷன் அரிசி.

Published On :2 நவம்பர் 2026, 2:40 am IST

வேலூா் அருகே இரண்டு லாரிகளில் கடத்திச் செல்லப்பட்ட சுமாா் 71 டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை வேலூா் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) வின்சென்ட் தலைமையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், காவல் ஆய்வாளா் திலகா, உதவி ஆய்வாளா் காா்த்திக் மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் சனிக்கிழமை வேலூா் மாவட்டம், பொன்னை - திருவலம் மாநில நான்கு வழிச் சாலையில் உள்ள மேல்பாடி பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி போலீஸாா் நடத்திய சோதனையில், அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுமாா் 71 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த லாரிகளை ஓட்டி வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தனபதி மகன் ராமச்சந்திரன் (49), சண்முகம் மகன் தங்கமணி (48) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 71 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.