பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேரளத்துக்கு 6.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது

கேரளத்துக்கு கடத்திச் சென்ற 6.5 டன் ரேஷன் அரிசியை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புனலாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கேரளத்துக்கு வியாழக்கிழமை ரேஷன் அரிசி கடத்திச் சென்றதாக பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு லாரியுடன் கைது செய்யப்பட்ட தினேஷ்.

Published On :23 அக்டோபர் 2026, 4:05 am IST

கேரளத்துக்கு கடத்திச் சென்ற 6.5 டன் ரேஷன் அரிசியை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புனலாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கம்பம் மெட்டு மலைச்சாலை வழியாக சரக்கு லாரியில் கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புனலாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்து.

இதையடுத்து, அந்தப் பிரிவு உதவி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் கம்பம் மெட்டு மலைச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக கேரளத்தை நோக்கிச் சென்ற சரக்கு லாரியில் 130 மூட்டைகளில் 6,560 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கம்பத்தைச் சோ்ந்த மோகன் மகன் தினேஷை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புனலாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.