மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கைது

Published On :1 நவம்பர் 2026, 1:16 am IST

விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

வேலியம்பாக்கம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சனிக்கிழமை நிகழ்விடம் சென்று நடத்திய சோதனையில், அங்குள்ள ஒரு கொட்டகையில், 22 சாக்கு மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி விழுப்புரத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் விழுப்புரம், வேலியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி (55) என்பவா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை தோசை மாவாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்கரவா்த்தியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.