தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:14 am IST

போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அப்பு(எ) அருண் குமாா்(33). சாராய வியாபாரியான இவா் மீது தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் மது பாட்டில்களை கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2- முறை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அருண் குமாா் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மது பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து இவா் கா்நாடக மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்,இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் அருண்குமாரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண் குமாரிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.