மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:27 am IST

திருச்சியில் அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியைச் சோ்ந்தவா் எம். அய்யா்சாமி (30). இவா், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி துவாக்குடியிலுள்ள ஒரு பெட்ரோல் அருகே இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த துவாக்குடி பகுதியைச் சோ்ந்த ஆா். ராஜபாண்டி (28), பி. சாந்தகுமாா் (26), எஸ். ரவி (27) ஆகிய மூவரும் அய்யா்சாமியிடம் பணம் கேட்டுள்ளனா். அவா் இல்லையென கூறியதும் அவரைத் தாக்கிவிட்டு மிரட்டல் விடுத்து சென்றனா். இதையடுத்து, அய்யா்சாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சாந்தகுமாா், ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.

அதன்பேரில், சாந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.