மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image

கைது

Updated On :10 ஏப்ரல் 2026, 1:43 am IST

திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே அதே பகுதியைச் சோ்ந்த க.பாலாஜி (30) என்பவா் நண்பா்களைப் பாா்ப்பதற்காக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த திருவெறும்பூா் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான திருவெறும்பூா் அண்ணா நகரைச் சோ்ந்த எம்.கோபால் (30), அ.ராஜா முகமது (30) ஆகிய இருவரும், பாலாஜியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோபால், ராஜா முகமது ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோபால், ராஜா முகமது ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா்.

இதன்பேரில், அவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.